Skip to main content

கலைஞர் உடல் நலம் குறித்து கேட்டறிந்த தொண்டர் மாரடைப்பால் உயிரிழப்பு

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
kovilpillai


தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகர் அருகேயுள்ள பிச்சைத் தலைவன்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த கோவில் பிள்ளை. 76 வயதுடைய முதியவர். நினைவு தெரிந்த நாள் முதல் அண்ணா, அடுத்து கலைஞர், தி.மு.க.வின் மீது பற்றும் பாசமும் கொண்டவர் ஆரம்ப காலத்தில் தி.மு.க.வின் அந்தப் பகுதியின் கிளைக்கழக செயலாளளராகவும் இருந்திருக்கிறார். கலைஞர் மீதான பாசம் காரணமாக தன் மகனுக்கு கருணாநிதி என்று பெயரும் வைத்திருக்கிறார்.
 

 

 

இவரது மனைவி ஜெயமணி இவர்களுக்கு மூன்று மகன்கள் இரண்டு மகள்கள். அனைவரும் திருணமாகி தனிக்குடித்தனம் போய் விட்டனர். வயதான காலத்தின் கோவில் பிள்ளையும் அவரது மனைவியும் பிச்சைத் தலைவன்பட்டியிலேயே தொடர்ந்து வசித்தவர்கள் பிழைப்பின் பொருட்டு அங்கே ஒரு பெட்டிக் கடையும் நடத்தி வந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் தி.மு.க.வின் இவரது பாசம் மிக்க தலைவர் கலைஞர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அன்றிலிருந்தே கோவில் பிள்ளை கவலையிலிருந்திருக்கிறார்.
 

 

 

இதனிடையே நேற்று காலை தன் கிராமத்தில் உள்ள டீக் கடைக்கு டீ குடிப்பதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள டி.வி.யில் கலைஞர் உடல் நலத்தில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுப் பின் சரியானது என்ற பிளாஷ் நியூஷ் வர, அதைப் பார்த்து அதிர்ச்சியான கோவில் பிள்ளை, பதை பதைப்பில் தன் மார்பைப் பிடித்துச் சரிந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.
 

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோவில்பட்டி போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி உடற் கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.


 
 

சார்ந்த செய்திகள்