Published on 06/04/2021 | Edited on 06/04/2021

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை முதலே வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 13.80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் தொகுதியில் அதிகபட்சமாக 20.23 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. சென்னையில் மட்டும் காலை 9 மணி நிலவரப்படி10.58 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.