சமீபத்தில் பெரம்பலூர் பாலியல் புகார் சம்பவம் ஆடியோ ஒன்று பெரிய புயலைக் கிளப்பியது.அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது அரசியல் வட்டாரங்களில் இந்த ஆடியோவில் ஆளும் தரப்புக்கு தொடர்பு உள்ளது என தகவல் வெளியாகின. அரசு வேலைக்குச் சிபாரிசு செய்வதாகக் கூறி, தனியார் ஹோட்டலுக்கு நேர்காணலுக்கு அழைத்து, பாலியல் சில்மிஷங்களில் இறங்குவதாகவும் அதை வீடியோவாக எடுத்து, அதைவைத்தே பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவில் இறங்குவதாகவும் அ.தி.மு.க. வி.ஐ.பி., அவரது உதவியாளர் வேல்முருகன்மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுசம்பந்தமாக ஆடியோ ஒன்றை வெளியிட்டதோடு, சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சி வி.ஐ.பி. மீது மாவட்ட எஸ்.பி.யிடம் புகாரும் அளித்தார் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. மகளிரணியினர், அ.தி.மு.க. மாவட்ட வழக்கறிஞர் நலச் சங்கத்தினர் காமராஜ், ஸ்டாலின், சத்தியசீலன் ஆகியோர் தலைமையில் மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டலிடம் அட்வகேட் அருள்மீது, “ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது குறிவைத்து பாலியல் அவதூறு பரப்புவதாகவும், அதனால் அவர்மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என புகார் கொடுத்தனர். இதையடுத்து வழக்கறிஞர் அருளை பெரம்பலூர் போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவத்தில் புகார் கொடுத்தவரையே போலீஸ் கைது செய்தது பெரும் அதிர்ச்சியை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்திள்ளது.