Skip to main content

தடுப்பூசி போட்டுக்கொள்ள காந்த்திருந்த மக்கள்..! (படங்கள்)

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

 

இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுபடுத்த இந்தியாவின் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது.  அதே போல் தமிழகத்திலும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

 

அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கும் அமலில் உள்ளது. அதேவேளையில் பொதுமக்களின் அசாதரண போக்கால் ஆங்காங்கே மாநகராட்சி சார்பிலும், காவல் துறையின் சார்பிலும் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா கட்டுபாட்டின் ஒரு பகுதியாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி  செலுத்திகொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. 

 

பல நிறுவனங்களில் தடுப்பூசி செலுத்த ஆர்வம் தெரிவித்தவர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்து வருகின்றனர். அதே சமயம் வருகிற மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ‘கோவின்’ என்ற இணையத்தளத்தில் பதிவு  செய்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கம் ஜெயகோபால் கரோடியா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி முகாமில் ஊசி போட மக்கள் காத்திருந்தனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆம்ஸ்ட்ராங் படுகொலை - மாயாவதி கண்டனம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Armstrong issue Mayawati condemned

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. 

Armstrong issue Mayawati condemned

ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி) தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் படுகொலை - இ.பி.எஸ். கண்டனம்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Bahujan Samaj State President incident EPS Condemnation

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்ததுள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர். 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயருற்றேன். ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதிக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 

Bahujan Samaj State President incident EPS Condemnation

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ளவர் படுகொலை செய்யப்படுகிறார் எனில், இதற்கு மேல் இந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை என்னவென்று சொல்லி விமர்சிப்பது?. கொலை செய்வதற்கான தைரியம் குற்றவாளிகளுக்கு எப்படி வருகிறது?. காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாகக் குற்றங்கள் நடைபெறும் அளவிற்கு அவல நிலைக்குச் சட்டம் ஒழுங்கைத் தள்ளிய முதல்வருக்கு எனது கடும் கண்டனம். ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவரது இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியான முறையில் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.