Skip to main content

ஆடி அமாவாசை; காவிரி ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

people perform tarpan Cauvery river occasion new moon

 

கரூர் மாயனூர் காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்.

 

தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி தை அமாவாசையான இன்று(28.7.2022) காவிரி ஆற்றுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

 

people perform tarpan Cauvery river occasion new moon

 

கரூர் அருகே உள்ள மாயனூர் காவிரி ஆற்றில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் ஆற்றங்கரையில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். பின்னர் வீடுகளுக்கு சென்று முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்