Skip to main content

செல்போன் டவர் மீது ஏறி மக்கள் போராட்டம்

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

People on cellphone tower

 

விழுப்புரம் மாவட்டம், காங்கேயனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு சொந்தமான காலி இடத்தில் கடந்த வாரம் ஒரு தனியார் செல்போன் நிறுவனம் உயர் மின் கோபுரம் (டவர்) அமைத்துள்ளது. இந்த செல்போன் டவர் அமைப்பதற்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதையும் மீறி செல்போன் டவர் அமைக்கப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 11 மணியளவில் அந்த செல்போன் டவர் கோபுரத்தில் ஏறி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்போன் டவர் அமைப்பதால் அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளினால் குருவி இனங்கள் அழிந்துவிடும் டவர் அமைந்துள்ள அப்பகுதியை சுற்றிலும் வாழும் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள் எனவே செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். 

 

இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் மற்றும் போலீசார் அளித்த உறுதியை அடுத்து செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியவர்கள் கீழே இறங்கி வந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்