Skip to main content

வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேனா, பென்சிலுக்கு அனுமதி உண்டா...?- தமிழக அதிகாரி கேள்வி... தலைமை ஆணையம் பதில்

Published on 22/05/2019 | Edited on 22/05/2019

 

இந்தியா முழுவதும் 17-வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று முடிந்தது. இதற்கான கடைசி கட்ட மக்களவை தேர்தல் கடந்த (19/05/2019) நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியான நிலையில் வரும் 23 ஆம் தேதி (நாளை) நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் 20 ஆயிரம் விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளுடன் ஒப்பிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் முடிவுகளை வெளியிட 5 மணிநேரம் தாமதமாகும் என இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

 

election

 

இந்நிலையில் நாளை வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணுவோர் பேப்பர், நோட்பேட், பேனா, பென்சில் கொண்டுசெல்ல அனுமதி உள்ளதாக என தமிழக  தலைமை தேர்தல் அதிகாரி ஆணையத்திடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணுவோர் பேப்பர், நோட்பேட், பேனா, பென்சில் கொண்டுசெல்ல அனுமதி உள்ளதாகவும், அதேபோல் 17சி படிவத்தின்  நகலையும் எடுத்து செல்லலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்