Skip to main content

என்.எல்.சி ஆலையின் உபரி நீர்...விவசாயிகள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று மனு!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வயலூர் கிராமத்தில் சுமார் 690 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நீர் ஆதாரத்தை பெருக்குவது மூலம், சுற்றுவட்டார பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில்  வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கு வழி வகை செய்யும் நோக்கில்,  வயலூர் ஏரியை ஆழப்படுத்தி,  நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் உபரிநீரை வயலூர் ஏரிக்கு கொண்டு வர வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகள் கோரிக்கையாக இருந்து வருகிறது. 


 

 Eṉ.El.Ci ālaiyiṉ upari nīr...Vivacāyikaḷ irucakkara vākaṉattil pēraṇiyāka ceṉṟu maṉu! 82/5000 Surplus water from NLC plant ... Farmers ride in two-wheeler RALLY

 

இந்நிலையில் என்எல்.சியின் CSR நிதியிலிருந்து வயலூர் ஏரியை ஆழப்படுத்தி, நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தின் உபரி நீரை கொண்டு வரக்கோரி, ஜனநாயக விவசாய சங்கத்தினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வயலூர் ஏரியிலிருந்து இரு சக்கர வாகனத்தின் மூலம் ஊர்வலமாக சென்று நெய்வேலி என்.எல்.சி நிறுவன தலைவரிடம் மனு அளிக்க அளித்தனர். பின்னர் என்.எல்.சியின் மனித வள மேம்பாட்டு இயக்குனர் மோகனிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அப்போது  '2020' ஆம் ஆண்டு என்.எல்.சி நிறுவனத்தின் CSR நிதியில் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று என்.எல்.சி நிர்வாகம் கூறியதால் விவசாயிகள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







 

 

 

 

சார்ந்த செய்திகள்