கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார்!
முன்னால் அமைச்சர் பழனியப்பன் - உருவபொம்மை எரிப்பு!!
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்டபட்ட, எட்டிமரத்துபட்டியில் அதிமுக தொண்டா்கள் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினா் பழனியப்பன், கட்சிக்கு துரோகம் செய்தாக கூறி அவரின் உருவ பொம்மையை எரித்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அதிமுக கட்சி தொண்டர்கள் பேசும்போது இரண்டு அணிகள் இணைப்பை அதிமுக தொண்டர்களும், மக்களும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கட்சியை பிளவுபடுத்தும் நோக்கத்தில் பழனியப்பன் தினகரனுடன் சேர்ந்து கட்சிக்கு துரோகம் செய்கின்றார் என கோஷங்களை எழுப்பி, அவரது உருவபொம்மையை எரித்தனர்.
- எம்.வடிவேல்