திண்டுக்கல் அருகே உள்ள கன்னிவாடி பகுதிகளில் தோட்டத்துக்குள் புகுந்து விளைநிலங்களை காட்டு யானைகள் அழித்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் கன்னிவாடி ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் விவசாயிகள் வாழை, தென்னை, காப்பி, மிளகு உள்பட சில விவசாயம் செய்து வருகின்றனர். சமீபகாலமாகவே இப்பகுதியில் வனவிலங்குகள் இந்த தோட்டங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை அழித்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை காட்டுக்குள் விரட்டினாலும் மீண்டும் அவை விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தன. இந்த யானை கூட்டம் தொடர்ந்து கன்னிவாடி வனப்பகுதியில் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன. நேற்று இரவு பள்ளபட்டி அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்த யானை அங்கு விளைந்த பயிர்களை நாசப்படுத்தி விட்டு சென்றன.
அதேபோல் சத்தியமூர்த்தி என்பவர் தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தியது. மேலும் வைகை மணி என்பவரின் தோட்டத்தில் மாமரம், தென்னை, காப்பி, மிளகு போன்ற மரங்களை வேரோடு சாய்ந்தன. வெற்றி என்பவரின் தோட்டத்தில் சோளப் பயிர்களை சேதப்படுத்தியது. ஏற்கனவே விவசாயி சத்தியமூர்த்தி வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பதற்காக முள்வேலி அமைத்து இருந்தார். ஆனால் யானைகள் அந்த முள் வேலியை உடைத்து உள்ளே புகுந்து விவசாய நிலங்களை அழித்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இப்படி ஒரு விவசாய நிலங்களை யானைகள் அழித்து நாசப்படுத்தி வருவதைக் கண்டு விவசாயிகள் மனம் நொந்துபோய் வருகிறார்கள். இந்த யானைகள் பெரும்பாலும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை காட்டுப்பகுதியில் இருந்து வந்து தோட்டங்களில் புகுந்து விடுகின்றன. இதனால் மாலை வேளையில் விவசாயிகள் தோட்டத்துக்கு செல்லவும் அஞ்சு வருகின்றனர்.
இதுபற்றி கன்னிவாடி வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பேரில் ரேஞ்சர் ரவிச்சந்திரன் தலைமையில் பாரஸ்ட் தண்டபாணி. வனக்காப்பாளர் சங்கர். உள்பட வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று அந்த யானைக் கூட்டங்களை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்படி இருந்தும் குட்டி யானைகளுடன் யானைகள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு உள்ளதால் விவசாயிகள் பீதியில் இருந்து வருகிறார்கள்.
ஆனால் திண்டுக்கல் வனக்கோட்டத்தில் ஏழு ரேஞ்சர்கள் இருக்க வேண்டும் ஆனால் நத்தம் ஒட்டன்சத்திரம் கன்னிவாடி கோட்டங்களில் ரேஞ்சர்கள் இல்லாததால் மற்ற கோட்டங்களில் இருக்கக் கூடிய ரேஞ்சர்கள் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அப்பகுதிகளில் உள்ள விவசாயநிலங்களை அழித்துவரும் யானைகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் காலியாக உள்ள இடங்களுக்கு ரேஞ்ரசகளை உடனடியாக வனத்துறை அதிகாரிகள் நியமித்தால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அழித்து வரும் வன விலங்குகளையும் விரட்டியடிக்க ஏதுவாக இருக்கும் என அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.