Published on 18/03/2019 | Edited on 18/03/2019
சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இன்று காலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குவந்த மிரட்டலைத்தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிகுண்டு ஏதும் இல்லாததால் மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. மேலும் காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.