Skip to main content

புது வீட்டுக்கு மாறினார் ஓபிஎஸ்! 

Published on 04/06/2021 | Edited on 04/06/2021

 

OPS moved to a new home!

 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் அரசு பங்களாவைக் காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், முன்னாள் துணை முதல்வரும், போடி தொகுதி எம்.எல்.ஏவுமான ஓ. பன்னீர்செல்வம், அரசு பங்களாவைக் காலி செய்துவிட்டு சென்னையில் புது வீட்டுக்கு மாறியுள்ளார். தி.நகர் கிருஷ்ணா தெருவில் சிவாஜி வீட்டுக்கு அருகே உள்ள புதுவீட்டிற்கு ஓ.பி.எஸ் குடிபெயர்ந்துள்ளார்.

 

சென்னை கிரீன்வேஸ் சாலை அரசு பங்களாவிலிருந்து பெரும்பாலான பொருட்களை ஓபிஎஸ் காலி செய்துவிட்டார். புதிய வீட்டுக்கு இடம்பெயர்ந்த நிலையில், எஞ்சியுள்ள பொருட்களையும் ஞாயிற்றுக்கிழமை எடுத்துக்கொள்கிறார் ஓபிஎஸ்.

 

 

சார்ந்த செய்திகள்