Skip to main content

கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! தனது ஆதரவாளர் மூலம்!!

Published on 22/08/2017 | Edited on 22/08/2017
கேணியை தானமாக எழுதி கொடுத்தார் ஒ.பி.எஸ்! 
தனது ஆதரவாளர் மூலம்!!



பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் மக்களின் குடிநீர் பிரச்சனைக்காக கோம்பை அடிவாரத்தில் உள்ள தனது ஆதரவாளர் சுப்புராஜ் பெயரில் இருந்த கிணறுடன் சேர்த்து 18 சென்ட்டு நிலத்தை ஒ.பி.எஸ் எழுதி கொடுக்க சொன்னார்.  அதை ஊர் மக்களும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர். அதன் அடிப்படையில் தான் அம்மாவாசை நளான இன்று 21 ம் தேதி பெரியகுளத்தில் உள்ள சப்ரிஜிட்டர் ஆபிசில் ஒ.பி.எஸ் ஆதரவாளர் சுப்புராஜ்  ஊர் மக்களின் குடிநீர்ருக்காக நிலத்தை ஒ.பி.எஸ் சொன்னதின் பேரில் தானமாக எழுதி கொடுத்தார். இதன் மூலம் இரண்டு மாதம்மாக போராடிய லட்சுமிபுரம் மக்களின் குடிநீர் பிரச்சினையும் ஒ.பி.எஸ் மூலம் தீர்த்து வைக்கபட்டுள்ளதை கண்டு ஊர் மக்கள் ஒன்று  திரண்டு கூடி ஒபிஎஸ்க்கு நன்றி தெரித்தும் இருக்கிறார்கள்.

-சக்தி

சார்ந்த செய்திகள்