![One person was injured when the balcony of a 50-year-old building collapsed](http://image.nakkheeran.in/cdn/farfuture/yltXLzlPcZvgC3tc8ynruSotWG-uDQcFTArUtLyhjlE/1634362037/sites/default/files/inline-images/50yrs-building.jpg)
திருச்சி தாராநல்லுார் கிருஷ்ணாபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்தக் குடியிருப்புக்குள் 22 வீடுகள் இருந்தாலும் 8 வீடுகளில் மட்டுமே ஆட்கள் குடியிருந்துவந்துள்ளனர். இந்தக் கட்டடமானது, மையப்பகுதியில் இடைவௌியுடன் சுற்றி பால்கனி உள்ளது போன்ற வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தின் ஒருபுறத்தில் உள்ள பால்கனி திடீரென இடிந்து விழுந்தது.
இரவு நேரம் என்பதால் அதிர்ஷ்டவசமாக யாரும் இதில் சிக்கவில்லை. ஆனால் பெரியநாயகி (75) என்கிற மூதாட்டி உள்ளிட்ட 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பெரியநாயகி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், திருச்சி மாநகராட்சியினர் அப்பகுதியில் ஆய்வு நடத்தியதோடு, கட்டட உரிமம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.
![ads](http://image.nakkheeran.in/cdn/farfuture/djwmoWA1eD8PkME54Ibtsd8g7S-0pnO-ALD7Fx8wMd8/1634362065/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_128.jpg)