Skip to main content

கவனத்தை திசைதிருப்பி ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை... போலீசார் விசாரணை!

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

n

 

சிதம்பரம் பொன்னம்பலம் நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி கலா ராணி (51) இவர்கள் இருவரும் புதன்கிழமை சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள கனரா வங்கியில் நகையை அடகு வைத்து விட்டு 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு மேலவீதியில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு ரூபாய்10 ஆயிரத்தைச் செலவுக்கு எடுத்துக் கொண்டு மீதி உள்ள 1 லட்சம் ரூபாயை இருசக்கர வாகன பெட்டியில் வைத்து விட்டு கணவர் கடைக்குச் சென்று உள்ளார்.

 

அப்போது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்த கலா ராணியின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில் சில ரூபாய் நோட்டுகளைக் கீழே போட்டுவிட்டு உங்கள் பணம் கீழே கிடக்கிறது எனக் கூறியுள்ளனர். இதனை எடுக்க கலாராணி சென்றபோது வண்டியிலிருந்த ஒரு லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து கலா ராணி சிதம்பர நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்