திமுக பிரமுகரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்துச் சென்றது, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்தது உள்ளிட்ட புகார்களின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு பின்னர் கடந்த 12 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது, ''அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது. மிரட்டலுக்கு அஞ்சவும் மாட்டோம். அதிமுகவில் உள்ள ஒன்றரைக்கோடி தொண்டர்களின் வாயை மூடிவிட முடியாது'' என்றார். திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருடன் கைது செய்யப்பட்டிருந்த டெல்லி ராஜு மற்றும் காளி என்கின்ற பரமேஸ்வரனுக்கும் உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.