
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 14வயது பள்ளிச் சிறுவன் ஒருவன் பள்ளி முடித்துவிட்டு சொந்த ஊருக்கு செல்ல பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வேல்மணி(53) எனும் நபர் சிறுவனுக்கு இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்ற பிறகு அருகாமையில் உள்ள காப்பு காட்டிற்குள் இருசக்கர வாகனத்தைச் செலுத்தி சிறுவனை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வேல்மணியிடம் இருந்து தப்பி வந்த சிறுவன் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ரிஷிவந்தியம் போலீஸார் உதவியுடன் வேல்மணி பிடித்து வந்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து வேல்மணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பள்ளிச் சிறுவனுக்கு லிப்ட் கொடுப்பது போல் அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.