
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இன்று (06/10/2021) கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்டோபர் 17ஆம் தேதி அன்று அ.தி.மு.க.வின் 50வது ஆண்டு பொன்விழாவைத் தொண்டர்கள் கொண்டாட வேண்டும். வெற்றியைத் தாங்கி நிற்கும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி சிறப்பிக்க வேண்டும்.
கொண்டாட்டங்களின்போது தொண்டர்கள் அரசு அறிவித்துள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்ட அளவிலான அனைத்து இடங்களிலும் கட்சிக் கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும். புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் மாநிலங்களில் அ.தி.மு.க. 50வது ஆண்டு பொன் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.