
புதுச்சேரி என்சிசி குரூப்பை சேர்ந்த 49 மாணவர்கள், இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு, அகில இந்திய வாயு சைனிக் முகாம், அகில இந்திய தல் சைனிக் முகாம், அகில இந்திய நவ் சைனிக் முகாம், தென் மண்டலத் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் மற்றும் இயக்குனரகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் என்சிசி இயக்குநரகம் குடியரசு தின முகாம் 2025-ல் அகில இந்திய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது சாதனை படைத்தனர்.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் இயக்குநரகத்தின் ஒரு பகுதியாக, என்.சி.சி புதுச்சேரி குருப் மாணவர்கள், கர்தவ்யா பாத், கார்ட் ஆப்ஃ ஹானர், பிரதமரின் பேரணி மற்றும் கலாச்சார நிகழ்வுகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று குழு நடனம் மற்றும் குழுப் பாடலில் பரிசுகளை வென்றனர். இது தவிர புதுச்சேரி என்சிசி குருப்பின் மாணவர்கள் அகில இந்திய அளவில் பல்வேறு பயிற்சி நிகழ்வுகளில் பல பதக்கங்களையும் வென்றுள்ளனர். பல்வேறு நிலைகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி புதுச்சேரி ராஜ்நிவாஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஸ்ரீ கே.கைலாசநாதன் தலைமை தாங்கி மாணவர்களை கௌரவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் என்சிசி இயக்குனரகத்தின் துணை இயக்குநர் ஜெனரல், கமோடோர் ராகவ், புதுச்சேரி என்சிசி குழுமத் தலைமையகத்தின் பொறுப்பு குரூப் கமாண்டர் கர்னல் வாசுதேவன் , புதுச்சேரி இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைச் செயலர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.