Skip to main content

ஓட்டுப் போட ஆச... ஆனா சேர்க்கல... ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பாரி வைத்த முதியவர்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் சூடு பறக்கும் பிரச்சாரங்கள் என்று தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஆனால் ஒரு முதியவர் ஒரு ஓட்டு போட ஆசைப்படுறேன் என்னை ஓட்டுல சேர்க்கல என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பாரி வைத்துக் கொண்டே மனு கொடுக்க வந்தார். மனுக்கள் வாங்காததால் மனு பெட்டியில் போட்டுவிட்டு ஒப்பாரி வைத்து தன் கோரிக்கையை வெளிப்படுத்தினார்.

   

இந்த முதியவரைப் பற்றி 13 ந் தேதியே நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு ஆதாருக்கு படம் எடுத்துள்ளனர்.

   

nn

 

60 வயதான முனியாண்டிக்கு வீடு வாசல் இல்லை, உறவுகளும் புறந்தள்ளிவிட்டது. அரசுப் பள்ளி சுவரே வீடு. சாவு வீடுகளில் ஒப்பாரியும் சில வீடுகளில் தண்ணீர் தூக்கி துணி துவைப்பதும் வருமானத்திற்கான வழி. ஆனால் இவர் இந்தியரா என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. குடும்ப அட்டை இல்லை, வாக்காளர் அடையாள அட்டை இல்லை, ஆதார் இல்லை. 60 வயதாகியும் ஒரு ஓட்டு கூட போட்டதில்லை. அரசு சலுகைகள் எதுவும் வாங்கியதில்லை. மொத்தத்தில் இந்தியாவிலேயே பிறந்து இந்தியாவில் வாழும் அகதி. 

 

 

எனக்கு அரசாங்கம் கொடுக்கும் உரிமைகளை கொடுங்கள் என்று 20 வருடங்களாக முதல்வர், ஆட்சியர், வட்டாச்சியர் என்று பல முறை மனு கொடுத்தும் முனியாண்டியை அதிகாரிகள் இந்தியராக ஏற்க மறுக்கிறார்கள்.

 

அதனால் தான் 60 வயதான எனக்கு ஒரு முறையாவது ஓட்டுப் போட உரிமையை கொடுங்கய்யா என்று தேர்தல் பரபரப்புகளுக்கிடையே ஒப்பாரி வைத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

 

 

முனியாண்டி ஒப்பாரியோடு நம்மிடம்.. ஒரு ஓட்டு போட ஆசைப்படுறேன்.. ஓட்டுல என்ன சேர்க்கல.. ஆதாரும் இல்ல.. பள்ளிக்கூட சுவரோரம் தங்குறேன். என் வாழ்நாளில் ஒரு முறையாவது ஓட்டுப்போட அனுமதிக்கனும் என்றார். அதிகாரிகளின் அலட்சியம் 42 வருடங்களாக ஓட்டுரிமையை பறித்து வைத்துள்ளனர்.

 

வாசகர்கள் சொல்லுங்கள் முனியாண்டிக்கு ஓட்டுரிமை கொடுக்க கூடாதா? 

 

 

 

 

சார்ந்த செய்திகள்