தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரம் பகுதியில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இப்பல்கலைக் கழகம் காவல்துறைக்குச் சொந்தமான திறந்த வெளி சிறைச்சாலைக்கு ஒதுக்கி வைக்கப்பட்டடிருந்த 58 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டியுள்ளது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு போலீஸ் ஹவுசிங் கார்ப்பரேசன் புகார் தெரிவித்தது. இந்த புகாரின் பேரில் மாவட்ட வருவாய்துறையினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
இதில் சாஸ்த்ரா சார்பில் ஆக்கிரமிப்பு இடங்களுக்கு பதிலாக மாற்று இடம் தருகிறோம் என்கிற வாதத்தை எல்லாம் வைத்தனர். ஆனாலும் உச்சநீதிமன்றம் சாஸ்தரா நிர்வாகத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து “அக்டோபர் 3-ம் தேதி தனது ஆக்கிரமிப்பு கட்டிடங்களை விட்டு சாஸ்த்ரா நிர்வாகம் வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஆக்கிரமிப்புகள் இடிக்கப்படும்” என்று தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டிஸ் அனுப்பப்பட்டது.
“கட்டடங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு வட்டாட்சியர் வருவாய்த்துறை அலுவலர்கள் மூலம் அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நேற்று தீடீர் என நள்ளிரவில் ஆக்கிரமிப்பு இடங்களை அளவீடு செய்யப்பபடுகிறது என்று தகவல்கள் பரவியது. இந்த நிலையில் பல்கலைகழககத்தின் சார்பில் மாணவிகளை தங்க வைக்க உடனடியாக மாற்று இடம் கிடைக்காததால் மாணவியர் விடுதியை இந்த கல்வியாண்டு முடிவடைந்ததுடன் ஒப்படைப்பதாகவும் மற்ற கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் ஒப்படைக்க தயார் எனவும் சாஸ்த்ரா நிர்வாகம் தரப்பில் தெரிவிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மற்ற கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களும் கையகப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்படும்” என்று தஞ்சை மாவட்ட நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.