Skip to main content

அடிப்படை வசதிகள் கேட்டு நர்சிங் மாணவிகள் சாலைமறியல் போராட்டம்!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நர்சிங் மாணவிகள் படித்து வருகிறார்கள். அதுபோல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மூன்று வருட நர்சிங் பயிற்சிக்காக 150 மாணவிகள் படித்து வருகிறார்கள்.

 

Nursing students struggle with roadblocking by asking for basic facilities!

 

இந்த மாணவிகள் அனைவரும் மருத்துவமனையில் உள்ள ஒரு கட்டிடத்தில் தங்கி பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார்கள். அப்படி இருந்தும் கூட மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் கஷ்டப்பட்டு வந்தனர். அந்த அளவுக்கு அந்த மாணவிகள் தங்கியுள்ள கட்டிட பகுதியில் மழை பெய்தால் ஒழுகும், மூன்று பாத்ரூம்களை 150 மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். லைட் வசதிகளும் சரிவர இல்லை அதனால் மாணவிகள் பெரிதும் கஷ்டப்பட்டு வந்தனர். அதோடு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

 

Nursing students struggle with roadblocking by asking for basic facilities!

 

இந்தநிலையில் அந்த கட்டிடத்தை எடுத்து கட்டுவதாகக் கூறி அங்கிருந்த 150 மாணவிகளை மற்றொரு  கட்டிடத்தில் தங்கவைக்க வலியுறுத்தினர். ஆனால் அந்த கட்டிடத்தில் ஏற்கனவே தங்கியிருந்த கட்டிடத்தைவிட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் நோயாளிகள் பயன்படுத்திய வார்டு என்பதால் மாணவிகளுக்கு பாத்ரூம் வசதியோ மற்ற எந்த ஒரு அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் மருத்துவமனைக்கு எதிரில் உள்ள சாலையில் உட்கார்ந்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி  போராட்டத்தில் குதித்தனர்.

இதனால் நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விஷயம் டிஎஸ்பி மணிமாறன் காதுக்கு எட்டவே சம்பவ இடத்திற்கு போலீசாருடன் வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படியிருந்தும் தொடர்ந்து மாணவிகள் மறியல் போராட்டத்தில் குதித்ததால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன் பின் மருத்துவமனையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் மாணவிகள் தங்குவதற்கும், படிப்பதற்கும் வசதிகள் செய்து தரப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் உத்தரவு கூறியதின் பேரில் மாணவிகளின் போராட்டம் கைவிடப்பட்டது. இப்படி நர்சிங் மாணவிகள் திடீரென போராட்டத்தில் குதித்தது திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

சார்ந்த செய்திகள்