Skip to main content

5 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்; 5 பேர் கைது; வேகமெடுக்கும் ஜாக்டோ - ஜியோ போராட்டம்!

Published on 27/01/2019 | Edited on 27/01/2019


அரசை இயக்கும் இயந்திரங்களான அரசுப்பணியாளர்கள் வீதிக்கு வந்து ஆக்ரோஷமாகப் போராடத் தொடங்கி விட்டார்கள். தமிழகமெங்கும் ஜாக்டோ, ஜியோ போராட்டங்கள் வேகமெடுக்கின்றன. அவர்களுக்கு ஆதரவாக 28ம் தேதி முதல் தலைமைச் செயலகப் பணியாளர்களும் போராட்டகளமிறங்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

 

pp

 

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் காலவரையரையற்ற வேலை நிறுத்தம் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் தீவிரமடைகிறது.

 

பழைய ஒய்வூதிய முறைகளைச் செயல்படுத்த வேண்டுமென்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு தினங்களாகப் போராடி வருகின்றனர் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களைக் கொண்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பினர். இதன் காரணமாக அரசுப் பள்ளிகள் மாவட்டத்தின், தென்காசி, சங்கரன்கோவில், ஆலங்குளம், போன்ற பகுதிகளின் அரசு நடுநிலைப் பள்ளிகள் ஆசிரியர்களின்றி செயல்படவில்லை.

 

pp

 

 

 

pp

 

 

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த மறியல் போராட்டத்திற்கு ஜாக்டோ – ஜியோவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான, பால்ராஜ், பார்த்தசாரதி, பாபு செல்வன், ஆரோக்யராஜ் உள்ளிட்டோர் தலைமைவகித்தனர். மேற்படி மறியலை மாநில உயர்மட்டக் குழு உறுப்பினரான நாகராஜன் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர், ஆசிரிய ஆசிரியைகள் திரளாக மறியலில் கலந்து கொண்டனர். அனுமதியின்றி மறியல் செய்தவர்களைப் போலீசார் கைது செய்ய முற்பட்ட போது அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. எனினும் கைது செய்யப்பட்டவர்கள் கொக்கிரகுளம் அருகில் உள்ள திருமண மண்படங்களில் வைக்கப்பட்டர்கள். அது சமயம், கால தாமதமாக வந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பலர் மண்டபத்திற்குள் செல்ல முயன்ற போது அவர்களைப் போலீசார் அனுமதிக்க மறுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

 

pp

 

 

pp

 

ஜாக்டோ – ஜியோ போராட்டம் காரணமாக மாவட்டங்களின் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் 16 தாலுகா அலுவலகங்கள், மூடப்பட்டு வருவாய்துறைப் பணிகள் முடங்கியதால், பொது மக்கள் சிராமத்திற்கு ஆளாயினர். மாவட்டத்தின் மூன்று பகுதிகளில் நடந்த மறியல் போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

 

குறிப்பாக ஜாக்டோ – ஜியோ அமைப்பு நிர்வாகிகளான பால்ராஜ், பாபு செல்வன், ஜான்பாரதிதாசன், லோகிதாசன், பேராட்சி, உள்ளிட்ட ஐந்து பேர்கள் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வந்தனர் மேலும் ஐந்தாயிரம் ஆசிரிய ஆசிரியைகளுக்கு கல்வித்துறையின் மூலம் நோட்டீஸ் அனுப்புகிற பணியும் வேக மெடுத்துள்ளன. இவர்கள் மீது அரசு ஊழியர்கள் நன்னடைத்தை விதிகளை மீறிச் செயல்பட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட விருக்கின்றன என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

pp

 

ஆனாலும் அரசின் அடக்கு முறைகள், மிரட்டல்களுக்கும் அடி பணியப் போவதில்லை. கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்கிறார்கள் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர்.

 

ஆசிரிய ஆசிரியைகள் போராட்டம் காரணமாக அரசுப் பள்ளிகளுக்கு பத்தாயிராம் ரூபாய் தொகுப்பு ஊதியம் அடிப்படையில் தற்காலிக ஆசிரிய, ஆசிரியைகள் நியமிக்குப் பணியும் வேகமெடுப்பதால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஏராளமானோர் மனுக்கள் கொடுத்த வருகின்றனர். இது மாவட்டக் கலெக்டர்களின் மேற்பார்வையில் நடக்கத் தொடங்கியிருக்கிறது.

 

இதனிடையே போராட்டத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ரயில் மறியல் போராட்டம், முற்றுகைப் போராட்டங்களையும் மேற் கொள்ளவிருக்கின்றனர், ஜாக்டோ – ஜியோ அமைப்பினர். முடங்கிய அரசு இயந்திரங்களை சீர்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது அரசு.

 

 

 

 

சார்ந்த செய்திகள்