
திமுக தலைவர் கலைஞர் காலமான செய்தியால் தமிழகமே இருண்டது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கங்கள் குறிப்பிட்ட இடங்களை அடைந்தவுடன் அரசு பணிமனைகளுக்கு திருப்பி விடப்பட்டன. பேருந்துகளின் முடக்கத்தால் பயணிகள் தங்களது ஊர்களுக்கு திரும்ப முடியாமல் இரவு நேரம் சாலையிலேயே இருந்தார்கள். அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் பேருந்துகளும் இரவு நேர பயணங்கள் முடக்கப்பட்டன. இதனிடையே தென்காசி நகர திமுக செயலாளர் சாதிர் தலைமையில் சுமார் 40 திமுகவினர் பழைய பேருந்து நிலையத்தின் மூன்பாக திரண்டு வந்து திடீரென இரவு 10 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேண்டும் வேண்டும் மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். மறியல் செய்தவர்கள் 40 பேரையும் தென்காசி நகர போலீசார் கைது செய்தனர். தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்பதுதான் எங்களது எங்களது கோரிக்கை என்கிறார் சாதிக்.

