தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்தார். இதனை அவரச வழக்காக ஏற்று விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பாளர் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீலை அக்கற்ற வேண்டும் என்று என்று நேற்று உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது சீல் அகற்றப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் உள்ளார். இந்த சங்கத்தில் தற்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை விஷாலுக்கு எதிரான அணி, தியாகராயர் நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலவலகத்திற்கு பூட்டு போட்டது.
இதையடுத்து அந்த அலுவலகத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைப்பேன் என்று வந்த விஷால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கைது செய்ய நேரிடும் என்று போலீசார் எச்சரித்தனர். உடனே விஷால் தானே ஏறி போலீஸ் வேனில் அமர்ந்தார். விஷால் மற்றும் அவருடன் வந்தவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
சட்ட விரோதமாக கூடியதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும் நடிகர் விஷால் உள்ளிட்ட 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதேபோல் சங்க அலுவலகத்துக்கு சட்ட விரோதமாக பூட்டு போட்டதாக எதிர்தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள்.
அத்துடன் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 145-ன் கீழ் இரு தரப்பினரும் சங்க அலுவலகத்திற்குள் நுழைய தடை விதித்த போலீசார், ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைத்து இருக்கிறார்கள்.மேலும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் விஷால் மீது ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 145வது சட்டப்பிரிவின் கீழ் விஷால், அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விஷால் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் சங்க நிர்வாகிகளை அவர்களது நிர்வாக கட்டிடத்திற்குள் நுழைய அனுமதிக்க முடியாமல் காவல்துறை எவ்வாறு தடுக்கமுடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சங்கத்திற்கு போடப்பட்ட சீலை அப்புறப்படுத்த உத்தரவிட்ட நிலையில் தற்போது அதிகாரிகள் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றினர்.