Published on 13/10/2019 | Edited on 13/10/2019
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17- ஆம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதிகளில் வளிமண்டலத்தின் பருவக்காற்று வீசத்தொடங்கியுள்ளது.
![Northeast Monsoon to begin on Oct 17](http://image.nakkheeran.in/cdn/farfuture/bo99mR0qVGs35axOsMXKBD05voC8HQ7nKpcJu3bZt6c/1570956494/sites/default/files/inline-images/Regional_metrological_centre_chennai11112222222.jpg)
மேலும் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவிலேயே பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல் தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.