புதுச்சேரி மாநில அ.தி.மு.க சட்டப்பேரவை கட்சி தலைவர் அன்பழகன் இன்று செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
புதுச்சேரி அரசு தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறது. அவர்களுக்கு சட்டமன்றத்தில் அறிவித்த எந்த கடன் உதவியும் வழங்கவில்லை, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியும் வழங்கவில்லை. சிறுகடன் வழங்குவதற்கு மத்திய அரசு தயாரகவும் இருந்தும் அதனை பெறுவதற்கு புதுச்சேரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மத்திய அரசின் நிதியை பெற முடியாத சூழல் நிலவுகிறது.
அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட கடனை திரும்ப பெறுவதற்கு அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் மக்களின் அன்றாட நிகழ்வுகள் குறித்த விவாதிக்கப்பதற்கு கூட பட்ஜெட் கூட்டத்தொடரை அரசு கூட்டவில்லை. காங்கிரஸ் கட்சியினரை திருப்திபடுத்த அவர்களுக்கு வாரியத்தலைவர் பதவி வழங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் அல்லாதவர்களுக்கு வாரியத்தலைவர் பதவி வழங்குவதை அதமுக எதிர்க்கிறது.
மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் ஊழலில் குற்றவாளி என்பதை நிருபத்து சி.பி.ஐ. அவரை கைது செய்துள்ளது.அவருக்கு ஆதரவாக துணைபோகும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது மத்திய அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும். தி.மு.க ஊழலுக்கும், ஊழல் செய்பவர்களுக்கும் ஆதரவாக உள்ளது இதனை மத்திய அரசு கண்காணித்து அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.