Skip to main content

'இந்து அல்லாதவர்களுக்கு பழனி கோவிலில் அனுமதியில்லை' - உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
nn

திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்களை கொடிமரத்தை தாண்டி உள்ளே அனுமதிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரசித்தி பெற்ற திண்டுக்கல் பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் இந்த கோவிலில் இந்து அல்லாதவர்கள் மற்றும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் எனப் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்து அல்லாதவர்கள் கோவிலின் கொடிமரத்தை தாண்டி அனுமதிக்கக்கூடாது. இந்து அல்லாத மாற்று மதத்தினர் மற்றும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்று பல்வேறு இடங்களில் அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண்டும் எனவும், மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் செல்ல விரும்பினால் 'கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது' எனப் பதிவேட்டில் எழுதி உறுதிமொழி அளித்துவிட்டுச் செல்ல வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி ஸ்ரீமதி.

சார்ந்த செய்திகள்