ரஜினி அரசியலுக்கு வருவதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி விழா ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாக பேசி பரபரப்பை கிளம்பினார். இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளதா இல்லையா என்பது விவாதப்பொருளானது. அரசியல் தலைவர்கள் அனைவரும் வெற்றிடம் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறுகையில், கலைஞர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் வெற்றிடம் என்பது உண்மைதான். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அவர் அரசியலுக்கு வருவதை தடுக்க முடியாது. கட்சி தொடங்கினால் அவரை ஆதரிப்பது குறித்து முடிவுவெடுப்போம் என்றார்.
மேலும் யாரிடமோ சன்மானம் வாங்கிக்கொண்டு புகழேந்தி செயல்படுகிறார் என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்தார்.