Published on 09/12/2020 | Edited on 09/12/2020
'நிவர்' புயலால் கடலூர், வேலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழகம் வந்த மத்தியக் குழு புயல் சேதங்களைப் பார்வையிட்டு டெல்லி திரும்பியது. மேலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கடலூர் மாவட்டத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று (09/12/2020) நாகை மாவட்டத்துக்குச் சென்றுள்ள முதல்வர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் தமிழகத்தில் 'நிவர்' புயல் சேதங்களைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூபாய் 74.24 கோடி நிதியைத் தமிழக அரசு ஒதுக்கியது. இந்த நிதியின் மூலம் நீர்நிலைகள், சாலைகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சீரமைக்கப்பட உள்ளது.