கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியிருக்கும் நிலையில் இதுவரை இரண்டு பேரை நிபா தாக்கியிருப்பதாக கேரளா சுகாதார துறை அறிவித்திருக்கும் நிலையில் மேலும் அது பரவாமல் தடுக்கும் விதமாக மத்திய மாநில சுகாதாரத்துறை மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. மேலும் நிபா வைரஸ் குறித்து இன்று முதல்வா் பினராய் விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த நிலையில் குமாி மாவட்ட கலெக்டா் பிரசாந் வடநேரா, நிபா வைரஸ் தொடா்பாக செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா். அப்போது அவா்...கேரளாவை ஒட்டியுள்ள குமாி மாவட்டத்தில் உள்ள 150 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் 12 அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் இருந்து வந்து செல்பவா்களையும் மருத்துவ குழுவினா் கண்காணித்து வருகின்றனா். இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.
மேலும் மக்கள் வீட்டு பிராணிகளிடத்தும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பறவைகள், விலங்கினங்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது. பழங்களை கழுவி தோல் எடுத்து தான் சாப்பிட வேண்டும் என்றாா்.