Skip to main content

ஒரு ஏக்கர் வாழைக்கு  5லட்சம் நிவாரண நிதி!  வழங்க மறுத்தால்   இடைத்தேர்தலை புறக்கணிப்போம்!!நிலக்கோட்டை மக்கள் உறுதி

Published on 18/11/2018 | Edited on 18/11/2018

 

n


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற மன்ற தொகுதிக்கு கூடிய விரவில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.


      இந்த நிலையில் தான் திடீரென திசை மாறிய கஜா புயலால் நிலக்கோட்டை தொகுதியில்  உள்ள  விளாம்பட்டி, மட்டப்பாறை, அனைப்பட்டி, சொக்குபிள்ளைபட்டி, சித்தர்கள் நத்தம்  உள்பட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடியான ரஸ்த்தாலி,  செவ்வாழை,  கற்பூரவள்ளி,  முப்பட்டைநாட்டு உள்ளிட்ட பல வகையான வாழை ரகங்கள் சாகுபடிகளை அப்பகுதிகளில்  உள்ள விவசாயிகள் செய்து இருந்தனர்.

 

nila

 

இந்த வாழை சாகுபடி மூலம் ஒவ்வொரு வாழையிலும்  வாழைகாய் காய்த்து கூடிய விரவில் முழுபலனை விவசாயிகள்  அடையும் சமயத்தில் தான்  திண்டுக்கல் மாவட்டத்தில் மையம் கொண்ட கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடியதின் மூலம் இப்பகுதிகளில் போடப்பட்ட 40ஆயிரம் வாழை மரங்கள்  ஒடிந்தும் வேறோடு சாய்ந்தும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்து இருப்பதை கண்டு விவசாயிகள் மனம் நொந்து வேதனை அடைந்து வருகிறார்கள்.

 

 
    இது பற்றி அப்பகுதியை  சேர்ந்த  விவசாயிகள்,   இந்த புயலால்  வாழை விவசாயமே அழித்து போய் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் இருந்து வருகிறார்கள்.   அப்படி இருந்தும் கூட ஏக்கர் கணக்கில்  சேதம்அடைந்து கிடக்கும் வாழையை  பார்வையிட மாவட்டத்தில் இருந்து  ஒரு அதிகாரி  கூட வரவில்லை.  அந்தந்த  பகுதிகளில் உள்ள தலையாரிகளை அனுப்பி வாழை சேதம் விபரங்களை கேட்டு வரச் சொல்லி  இருக்கிறார்கள்.  இது எந்த  விதத்தில் நியாம். அதன் மூலம்  விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஏற்பட போவது இல்லை.   அதுனால மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட வாழை சேதாரங்களை ஆய்வு செய்து  ஒரு ஏக்கர் வாழை சாகுபடிக்கு 5 லட்சம் வீதம் புயல் நிவாரண நிதியாக ஒவ்வொரு வாழை விவசாயிக்கும் இந்த எடப்பாடி  அரசு நிவாரண நிதி வழங்க முன் வரவேண்டும்.  தவறினால் வரக்கூடிய  இடைத்தேர்தலை புறக்கணிப்போம் என டென்ஷனாகவே  கூறினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காற்றில் பறக்கும் தேர்தல் விதிமுறை-நிலக்கோட்டையில் அதிகாரிகளின் மெத்தனம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Is there an election? Or not?- Complacency of authorities in Nilakottai

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியின் அலுவலகம் உள்ளது. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று தேர்தல் தேதி அறிவித்தும் கூட இதுவரை சீல் வைக்கப்படவில்லை. எம்.எல்.ஏ தேன்மொழி ஆதரவாளர்கள் வழக்கம்போல்  சட்டமன்ற அலுவலகத்தை பூட்டிச் சென்ற பூட்டு மட்டுமே அங்கு காட்சிப் பொருளாக தொங்குகின்றதே தவிர தேர்தல் விதி முறைகளின்படி அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைக்காமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.

இதே போல் தொகுதி முழுவதும் கொடிக் கம்பங்கள் அகற்றப்படவில்லை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரும் சாலையில் வைத்துள்ள பேனர்கள் அப்படியே இருக்கிறது. தொகுதியில் தேர்தல் நடக்கிறதா? இல்லையா? என பொதுமக்கள் கேட்கும் அளவிற்கு அதிகாரிகளின் செயல்பாடு மெத்தனமாக உள்ளதாகக் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

Next Story

மோடியின் படம் அருகே நின்று 'இந்துத்துவா எதிர்ப்பு கோஷம்'-நிகழ்ச்சியை அவசர அவசரமாக முடித்துவைத்த காவல்துறை!

Published on 17/09/2022 | Edited on 17/09/2022

 

The police hastily ended the 'anti-Hindutva slogan'-show by standing near Modi's picture!

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் ஏற்பாட்டில் நிலக்கோட்டை நான்கு மணி சந்திப்பில் பெரியாரின் 144வது பிறந்தநாள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் அதே நான்கு மணி சந்திப்பில் நான்கு பக்கமும் பாஜக கட்சியினர் மோடியின் பிறந்தநாள் வாழ்த்து பேனர்களை வைத்திருந்தனர். இதனிடையே அதேபகுதியில் மிகப் பிரமாண்ட அலங்கார அமைப்பில் பெரியார் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. பெரியார் படத்திற்கு பின்னணியில் மோடியின் படம் தெளிவாக தெரிந்த போதும் அதன் அருகில் நின்று கொண்டு பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வந்த திமுக பேரூர் செயலாளர் ஜோசப், விசிக தமிழரசன், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இந்துத்துவாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட் 'சுவீட்ட குடுங்க... சுவீட்ட குடுங்க...' என்று  சொல்லி நிகழ்ச்சியை வேகமாக முடித்து வைத்தார். இருந்தாலும் தொடர்ந்து கட்சிக்காரர்கள் மத்தியில் பதற்றம் நிலவியது.