தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநர் மாளிகையின் பின்வாசல் வழியாக புறப்பட்டனர்!
இன்று காலை ஆளுநரைச் சந்திக்க வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள், அவரைச் சந்தித்த பின் பின்வாசல் வழியாக புறப்பட்டனர்.
நேற்று அதிமுக-வில் பிளவுபட்டுக் கிடந்த இரு அணிகளும் இணைந்த நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தினகரனுடன் ஆலோசனை நடத்திய அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மெரினாவில் உள்ள் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்கள், நாளை ஆளுநரைச் சந்தித்து முறையிட இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில், அறிவித்ததைப் போல தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் இன்று காலை ஆளுநரை ஆளுநர் மாளிகையில் வைத்து சந்தித்தனர். ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பின்வாசல் வழியாக புறப்பட்டுச் சென்றனர்.