தஞ்சையில் இன்று, மறைந்த நடராசனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தினகரன் செய்தியாளர்களிடம் பேசும் போது,

அமமுகவின் மீதமுள்ள வேட்பாளர் பட்டியல் 22 ந் தேதி வெளியிடப்படும். அரசியல் கட்சிகள் மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள். அதனால்தான் ஆர். கே. நகர் போர்க்களத்தில் அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தனர்.
வாரிசு அரசியல் என்று பேசி வந்த ஒ.பி.எஸ். தன் மகனுக்கு சீட்டு கொடுத்திருக்கிறாரே என்ற கேள்விக்கு
ஊருக்குதான் உபதேசம் தனக்கு இல்லை என்பதை காட்டிவிட்டார். அதிமுகவின் மற்றொரு அணியாக பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் உள்ளது அமமுக. அதிமுக விரைவில் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் அமமுகவை பதிவு செய்யவில்லை. 25 ந் தேதி நாங்கள் கேட்கும் சின்னம் கிடைக்கும்.
எது பலமான கூட்டணி மாற்றம் முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டிருந்த முதல்வர் வேட்பாளரின் பித்தலாட்டமா? ஜெ நினைவிடம் கட்டக்கூடாது, படம் திறக்க கூடாது என்று சொன்னவர்களுடன் கூட்டணி வைப்பதுதான் பலமான கூட்டணியா?
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை பார்த்தாலே தெரியும் அது தேர்தல் அறிக்கை இல்லை பட்டாணி அறிக்கை. தேசிய கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. அதனால்தான் மாநிலங்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்றார்.