Skip to main content

பிறந்த சில மணி நேரத்தில் சாலையில் வீசியெறியப்பட்ட பெண் குழந்தை மீட்பு..!

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
பிறந்த சில மணி நேரத்தில் சாலையில் வீசியெறியப்பட்ட
பெண் குழந்தை மீட்பு..!

திருப்பூர் மாவட்டம், சின்னாண்டிப்பாளையத்தில் இருந்து மங்களம் செல்லும் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே காட்டுப்பகுதியில் நேற்று அதிகாலை நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அப்போது அந்தப்பகுதியில் இலேசான தூறலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.

குழந்தையின் சத்தம்கேட்டு அந்த வழியாக பால் கறப்பதற்காக சென்ற விவசாயி ஒருவர் சத்தம் வந்த இடத்தில் சென்று பார்த்தபோது அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒரு துணியில் சுற்றப்பட்டு குப்பையோடு குப்பையாக கிடந்தது தெரியவந்தது.

உடனடியாக அந்த குழந்தையை எடுத்துக் கொண்டுவந்து பக்கத்தில் இருந்த வீட்டில் இருந்தவர்களிடம் இது பற்றி கூறி குழந்தையை ஒப்டைதுள்ளார். அப்பகுதியினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்சு ஊழியர்கள் குழந்தையை மீட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.

மழையில் நனைந்ததால் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த குழந்தையை வீசி சென்ற பெண் யார் என்பது குறித்து போலீசார் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

- பெ.சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்