ஜெ.வின் மறைவுக்கு பின்பு ஜெவு.க்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டிற்கு ஒரு கும்பல் காரில் வந்தது. அந்த எஸ்டேட்டின் 10 ஆவது கதவை அந்த கும்பல் திறக்க சொன்னது. அங்கு காவல் பணியில் இருந்த கிருஷ்ணபகதூர், ஓம்பகதூர் ஆகியோரை அந்த கும்பல் தாக்கியது. அதில் கிருஷ்ணபகதூர் ஓடிவிட ஓம்பகதூர் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலைக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டிற்குள் புகுந்த அந்த கும்பல் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.
பரபரப்பான இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து அந்த கும்பல் வந்த காரை ஓட்டிவந்த கனகராஜ் என்பவர் போயஸ் கார்டனில் கார் டிரைவராக ஓபிஎஸ்சின் சிபாரிசில் வேலைபார்த்தார். அவர் போட்டுக்கொடுத்த திட்டத்தின் அடிப்படையில் இந்த கொள்ளை நடைபெற்றது. கனகராஜுடன் வந்து கொடநாட்டிற்குள் புகுந்தவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என சொல்லப்பட்டது. அதில் சயான் என்பவர் தலைமையில் கூலிப்படை வந்து கொள்ளையடித்தது.
இப்படி சொல்லப்பட்டுவந்த நேரத்தில் இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட கனகராஜ் என்பவர் ஈரோட்டில் மோட்டார் சைக்களில் வரும்பொழுது கார்மோதி மர்மமான முறையில் இறந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளி கேரளாவிலுள்ள கொச்சியில் இருந்து காரில் பெங்களூர் தப்பி சென்றபோது லாரி மோதி இறந்தார். அவரது மரணத்திலும் மர்மம் இருந்தது.
கொடநாடு கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து பேர் மர்மமான முறையில் இறந்தார்கள். அதற்கு பிறகு சயான் என்கிற கொடநாட்டில் மரவேலைகள் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அந்த சயான் தற்போது ஜாமினில் வெளிவந்துவிட்டார். சயானும் டெகல்கா பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்த சாமுவேல் என்பவரும் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
கொடநாடு கொள்ளை சம்பவத்தை நடத்துவதற்கு திட்டமிட்டது தமிழக முதல்வர் எடப்பாடி. அதற்காக ஆறு கோடி ரூபாய் வரை தருவதாக கொள்ளை கும்பலுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த கொள்ளைக்கும், ஜெ.மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு தொடர்பு இருக்கிறது .
அதுபற்றிய தகவல்களை நாளை தருவதாக சொல்லியிருக்கிறார்கள். மொத்தத்தில் இது ஜெ மரணம் பற்றிய விவகாரத்தை திசைத்திருப்ப நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பா? அல்லது இவர்கள் கூறுவது படியே ஜெவின் மரணத்திற்கும் கொடநாடு கொள்ளை சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என்கிற மர்மம் நாளை வெளியே வருமா? என்பது தெரியவரும்.