Skip to main content

பக்தர்கள் தரிசனம்: திருச்செந்தூர் கோவிலில் புதிய நடைமுறை அமல் 

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

thiruchendur

 

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

 

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கட்டண தரிசனம் மற்றும் பொதுதரிசனம் மூலம் பக்தர்கள் முருகனை தரிசிப்பது வழக்கம். கட்டண தரிசன முறையில் ரூ.20, ரூ.100, ரூ.250 என கட்டண தொகைக்கு ஏற்ப வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில்,  ரூ.20, ரூ.250 சிறப்பு தரிசனம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

 

இனி ரூ.100 தரிசனம் மற்றும் பொதுதரிசனம் மட்டுமே அமலில் இருக்கும் என்பதால் மகாமண்டபத்தில் இருந்து அனைத்து பக்தர்களும் ஒரே வழியில் சமமாகச் சென்று மூலவரை தரிசனம் செய்ய முடியும். பக்தர்கள் தரிசன முறையை ஒழுங்குப்படுத்த 125 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்