


திருவண்ணாமலை நகரில் வாழ்பவர் மூக்குப்பொடி சாமியார். விட்டோந்தியாக வாழும் இவர் அண்ணாமலையார் கோயில் எதிரே மற்றும் கிரிவலப்பாதையில் எங்காவுது இருப்பார். இவரிடம் திட்டு வாங்கினால், அடிவாங்கினால் தம்மை பிடித்த தீமைகள் விலகும், பாவங்கள் போகும், செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இவரை பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
அமமுக கட்சி தலைவர் தினரகன், இசையமைப்பாளர் இளையராஜா உட்பட பல பிரபலங்கள் இவரை அடிக்கடி வந்து வணங்குகின்றனர். அந்த வரிசையில் ஆகஸ்ட் 15ந்தேதி மதியம், உயர்நீதிமன்ற நீதிபதியாகவுள்ள டீக்கா.ராமன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அதோடு மூக்குப்பொடி சாமியாரை தரிசிக்கவிரும்பினார்.
இந்ததகவலை திருவண்ணாமலையில் உள்ள ஹோட்டல்கள் அதிபர் ஒருவர்க்கு தெரியப்படுத்தினர். அவர் மூக்குப்பொடி சாமியார் எங்குள்ளார் என விசாரிக்க சேஷாத்திரி ஆஸ்ரமத்தில் உள்ளார் என தகவல் கூறப்பட்டது. அவர் உடனே நீதிபதியையும், அவரது குடும்பத்தை அழைத்துக்கொண்டு ஆஸ்ரமத்துக்கு விரைந்துள்ளார்.
நீதிபதியும் அவரது குடும்பமும் அங்கு செல்வதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு ஆட்டோவில் ஏறி மூக்குபொடி சாமியார் எங்கோ சென்றுவிட்டார். நீதிபதி நீண்ட நேரம் காத்திருந்தும் அவர் வராததால் ஆஸ்ரமத்தில் இருந்து நீதிபதி வருத்தமாக கிளம்பி சென்றார்கள் என்கிறார்கள் ஆஸ்ரம ஊழியர்கள்.