தமிழகத்தில் அண்மையாகவே மிதமான மழை அவ்வப்பொழுது பொழிந்து வரும் நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மேலும் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இது 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். அதே போல் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானாவிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கும், அதேபோல் ஆந்திராவில் இன்று முதல் நான்கு நாட்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது, தெலுங்கானாவில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.