அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு ராயப்பேட்டையில் புது கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரி மாணவர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 3 நாட்களாக மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.