Published on 19/04/2023 | Edited on 19/04/2023
![New Chief Justice for Madras High Court; Collegium recommendation](http://image.nakkheeran.in/cdn/farfuture/LvZhJf_na4uaJm33JBmruTmhD3ukNewMnQ2z74iV5F0/1681924586/sites/default/files/inline-images/nm356.jpg)
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலாவை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
தற்பொழுது புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள கங்கா பூர்வாலா தற்பொழுது மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர தலைமை நீதிபதி அவசியம் என்று கொலிஜியம் அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய பரிந்துரையை கொலிஜியம் திரும்பப் பெற்றுள்ளது.