Skip to main content

நெல்லை கண்ணனை ஏன் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?ப.சிதம்பரம்

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

 

குடியுரிமைக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும்  அவதூறாக விமர்சித்ததாக பாஜகவினர் புகார் தெரிவித்ததை அடுத்து நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு,   அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

ப்

 

இதுகுறித்து    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், '’பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்? இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும். பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?’’கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்