Skip to main content

’ரத்த ஆறு ஓடும்....’- தென்காசியில் வைகோ பேச்சு

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

 தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர்  தனுஷ்குமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திருவேங்கடம், சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார்.   அப்போது அவர்,  ‘’தரைப்படை, கப்பற்படை, விமானைப்படை என்று முப்படைகளை கொண்ட ராணுவம் நாட்டின் தெய்வம்.   அதை கொண்டு அரசியல் செய்யக்கூடாது.

 

v

 

நாட்டில் மதசார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும்.  இல்லையென்றால் ரத்த ஆறு ஓடும்.   

 

v

 

 நதிகள் இணைப்பு பற்றி நான் எம்.பியாக  இருந்தபோதே பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசியுள்ளேன்.  அது தொடர்பாக விவாதமும் நடந்தது.  ஒரு பேட்டியில் மோடியிடம் நீட் தேர்வு செய்யப்படுமா என்று கேட்டதற்கு,  அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.   மாணவ, மாணவியருக்கு அது வசதியாக இருக்கும் என்றார்.

 

v

 

சார்ந்த செய்திகள்