











Published on 06/12/2018 | Edited on 06/12/2018
நெல் இரா.ஜெயராமன் இன்று (06.12 .2018) அதிகாலை 5 மணி அளவில் சென்னை தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனையில் காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் உள்பட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.