Skip to main content

ஒரு மாதம் அவகாசம் வேண்டும்... -அமைச்சர் செந்தில்பாலாஜி கடிதம்!

Published on 11/08/2021 | Edited on 11/08/2021

 

Need a month ... - Minister Senthilpalaji's letter!

 

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011 - 15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ரூ. 1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக செந்தில்பாலாஜி, அவரது உதவியாளர்கள், அவரது நண்பர்கள் உள்ளிட்டவர்கள் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த மூன்று வழக்குகளில் நான்குபேர் மீது ஒரு வழக்கும், 37 பேர் மீது 2 வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. செந்தில்பாலாஜி, ராஜ்குமார், சண்முகம், அசோக்குமார் ஆகிய நான்கு பேர் மீதான வழக்கு கடந்த 6ஆம் தேதி எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சண்முகம் தரப்பில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது எனவும், புகார் தெரிவித்தவர்கள் பணத்தைத் திருப்பிப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவுசெய்த நீதிபதி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய காலஅவகாகம் வேண்டும் என்று எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 19ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக செந்தில்பாலாஜி மீது புதிய வழக்கைப் பதிவுசெய்த மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், ஒருமாத காலம் அவகாசம் கேட்டு அமைச்சர் செந்தில்பாலாஜி கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள இருப்பதால் ஒருமாத கால அவகாசம் வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்