Skip to main content

கரோனா நிவாரண உதவியில் வித்தியாசம் காட்டிய திமுக பிரமுகர்!

Published on 19/04/2020 | Edited on 19/04/2020

திருவண்ணாமலை நகரம் கிரிவலப்பாதையில் 800க்கும் அதிகமான யாசகர்கள் உள்ளனர். குடும்பத்தாரால் கைவிடப்பட்டவர்கள், வயதானவர்கள், வெளியூரில் இருந்து பக்தி மார்க்கமாக வந்தவர்கள் என பலர் உள்ளனர். இவர்கள் தங்குவது கிரிவலப்பாதை நடைமேடையிலும், அங்குள்ள மடங்கள் கீழும் வாழ்கின்றனர். ஊரடங்கு உத்தரவு அமல் படுத்துவற்கு முன்பு இவர்களுக்கு சில ஆஸ்ரமங்கள், தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கி வந்தன. 

 

  DMK Personality - Corona Relief



கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் இவர்களுக்கான உணவு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இதனை கவனத்தில் கொண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்களுக்கான உணவை அவர்கள் இருக்கும் இடம் தேடிச்சென்று வழங்க தன்னார்வலர்களை நியமனம் செய்தார். அவர்கள் உணவு வழங்கி வருகின்றனர். அதிலும் சில குளறுபடிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் கிரிவலப்பாதையில் உள்ள 800க்கும் அதிகமான யாசகர்களுக்கு, திருவண்ணாமலை மாவட்ட திமுக மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் திருவண்ணாமலை நகர மன்ற தலைவருமான ஸ்ரீதரன், அவர்கள் சாப்பிடுவதற்கு பெரிய சில்வர் தட்டு, ஒரு பிஸ்கட் பாக்கெட், பிரட், ஒரு ஆரஞ்ச் பழம், வாழைப்பழம், 1 லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் போன்றவற்றை வழங்கினார்.

 

 DMK Personality - Corona Relief

 

யாசகர்களுக்கு உணவு பொருட்களை தந்துவிட்டு பலரும் நகர்ந்துவிடும் நிலையில் வித்தியாசமாக சாப்பிடுவதற்கு சில்வர் தட்டு தந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாம் அவரிடம் பேசியபோது, கிரிவலப்பாதையில் உள்ள யாசகர்களுக்கு பலரும் உணவு பொருட்களை தருகிறார்கள். அப்படி தருபவர்கள் பிளாஸ்டிக் பாக்கெட்டில் தருகிறார்கள், அதேபோல் வண்டியில் கொண்டு சென்று உணவு பொருட்களை தருபவர்கள் அதனை பிளாஸ்டிக் தட்டில் வைத்து தருகிறார்கள். இதனால் பிளாஸ்டிக்கால் உணவு வாங்கி சாப்பிடுபவர்களின் உடல் நலன் கெடுகிறது, மக்காத பிளாஸ்டிக்கால் மண்ணும் கெடுகிறது. இதனை கவனித்தேன், அதனால் அவர்கள் எப்போதும் வைத்துக்கொண்டு சாப்பிடும் வகையில் தட்டு வாங்கித்தரலாம் என யோசித்தே சில்வர் தட்டு 1000 பேருக்கு வாங்கி தந்துள்ளேன்.

 

y



அதேபோல் கிரிவலப்பாதையில் வசிக்கும் சாமியாளர்களுக்கு குடிநீர் பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது என அறிந்தேன். மினி டேங்குகள் பல கிரிவலப்பாதையில் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவர்கள் அங்கு சென்றே தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் இருப்பதாக சொன்னார்கள். இதனால் அவர்கள் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளும் வகையிலேயே பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் வாங்கி வழங்கியுள்ளோம். இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை அவர்கள் நீண்ட நாள் பயன்படுத்த முடியும். உணவு உண்ண தட்டு வழங்கியது அவர்களை சந்தோஷப்பட வைத்தள்ளது என்றார்.

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அணியும் பாதுகாப்பு உடைகள் 100 செட் வாங்கி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


சார்ந்த செய்திகள்