நீட் தேர்வு குறித்து: தமிழிசைக்கு விஜயதாரணி பதில்
இதுகுறித்து, விஜயதாரணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நீட் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய தமிழிசைக்கு, விஜயதாரணி பதிலடி கொடுத்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு 3 கேள்விகளை கேட்டிருந்தார். அவரது கேள்விக்கு பதிலடி தரும் வகையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, தமிழிசைக்கு 3 கேள்வி கேட்டு அறிக்கை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிக்கொண்டிருக்கும் மாணவி அனிதாவின் மரணம், எதனால் நடந்தது என்பதை பற்றி ஒன்றுமே தெரியாதது போல கேள்விகளை எழுப்பியுள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு நானும் 3 கேள்விகளை எழுப்புகிறேன். மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு நீட் தேர்வில் மத்திய பாடத்திட்டத்திலிருந்து கேள்விகளை எழுப்பி தேர்வுகளை நடத்தியது யார். தமிழகம் போன்ற மாநிலங்களில் சமூக நீதி என்ற அடிப்படை கல்விக் கொள்கை பின்பற்றப்படுவதை முழுவதுமாக புறக்கணிக்கும் மத்திய கல்விக் கொள்கையை திணிப்பது ஏன்.
கல்வி என்பது இன்னும் பொதுப்பட்டியலில் தான் இருக்கிறது. ஆனால் மத்திய பட்டியலில் இருப்பது போல ஒரு பார்வையை செலுத்தி, தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருமனதாக இயற்றிய நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்தை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பாமலும், தற்காலிகமாக அவசர சட்டம் கொண்டு வருவதையும் தகர்த்து, மாநிலத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்தில் பொதுப்பட்டியலில் மாநிலத்திற்கான உரிமைகளை பறிப்பது யார்? இதற்கு பதில் கூறுவாரா தமிழிசை சவுந்தராஜன். என்று இவ்வாறு கூறியுள்ளார்.