சரத்குமார் நடித்த சத்ரபதி பட இயக்குனர் ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அகம்பாவம். முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் நாயகி நமீதா நடித்துள்ளார். கதையை எழுதிய வாராகி வில்லனாகவும் முக்கிய வேடத்தில் சாதிகட்சி தலைவராக நடித்துள்ளார். நகைச்சுவையில் மனோபாலாவும், அப்புகுட்டியும் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் நாடோடிகள் கோபால் நடித்துள்ளார். ஒளிப்பதிவு ஜெகதீஸ்விஸ்வம், கோலிசோடா பட இசையமைப்பாளர் அருணகிரி இப்படத்திக்கு இசையமைத்துள்ளார். எடிட்டிங் சின்னுசத்தீஸ், மக்கள் தொடர்பு சரவணன் என்று கலைகட்டும் சூட்டிங் ஸ்பாட்டில், இப்படத்தில் நமீதா பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். இது ஆக்சன் மூவி. சமுதாயத்திற்கு எதிரான ஜாதி மோதலுக்கு எதிரான கருவை கொண்டு படமாக்கியுள்ளனர். இப்படத்தில் வரும் ஆக்ஸ்சன் காட்சிக்காக பிரெத்தியேக சண்டை பயிற்சி கடந்த இரண்டுமாதமாக எடுத்துவந்துள்ள நமீதா அது குறித்து அவர் நக்கீரனுக்கு அளித்த பேட்டி ...
நக்கீரன் : இப்படத்தை பற்றிய உங்கள் கருத்து ..?
நமீதா : நான் இதுவரை நடித்ததில் நடிகையை மையமாக கதை கொண்டு நான் நடிக்கும் முதல் படம் இது. மிகவும் மகிழ்ச்சி.
நக்கீரன் : இப்படத்தில் உங்கள் கதாப்பாத்திரத்தை பற்றி ..?
நமீதா :இப்படத்தில் முதல் முறையாக பத்திரிகையாளராக நடிக்கிறேன். மீடியா பவர் பற்றி வெளியிலிருந்து பார்த்துள்ளேன். அதே கதாபாத்திரமாக நடிக்கும் போது மனநிறைவு. அதே வேலை நக்கீரன் பற்றி புலனாய்வு பற்றியும் கேள்விபட்டிருக்கிறேன். அதே போல தைரியமாக சமுதாயத்தில் நடக்கும் அவலத்தை தட்டி கேட்கும் படம் இது.
நக்கீரன் : கதை பற்றி ..?
நமீதா :முதலே சொன்னது தான். சமூகத்தில் நடக்கும் சாதி, மதம் என்ற பெயரில் நடக்கும் மக்களுக்கு எதிரான அவலத்தை எதிர்த்து சாதி கட்சி தலைவர்களை எதிர்க்கும் படம்.
நக்கீரன் : படத்தில் சண்டை காட்சியில் நடிக்க கடுமையான பயிற்சிகள் எடுத்து வருகிறீர்களாமே ..?
நமீதா : ஆமாம். கடந்த இரண்டு மாதமாக தனி பயிற்சி எடுத்துவருகிறேன். சாதாரண தற்காப்பு கலை தான். ஆனால் குழந்தையாக இருந்த போது தரையில் பல குட்டிகரனம் அடித்துளேன். இப்போது அது செய்வது மட்டும் கடினமாக உள்ளது. மற்றபடி எளிய பயிற்சிகள் தான்.
நக்கீரன் : அகம்பாவம் படக்குழு பற்றி ..?
நமீதா : எல்லோரும் நட்பாக குடும்பமாக இருந்து கடந்த 50 நாட்கள் படப்பிடிப்பு முடித்துவிட்டோம். இந்த டீம் பொருத்தவரை வாராகி மற்றும் குழுவினர் எளிமையாகவே உள்ளனர். படத்தை திரையரங்கில் பார்க்கவும். குடும்பத்துடன் பார்க வேண்டிய படம். இது வரை கிளாமர் வேடத்தில் பார்த்த நமீதாவை ஆக்ஷன் நமீதாவாக பார்ப்பீர்கள். இந்த படம் என் சினிமா வாழ்வில் அடுத்த லெவல்.