Skip to main content

நம்பியாறு நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

nambiyaru dam water oepning cm edappadi palaniswami order


நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, பிசான பருவச் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, நம்பியாறு நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதானக் கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்குப் பிசான பருவச் சாகுபடிக்கு 27/01/2021 முதல் 31/03/2021 வரை நாள்தோறும், வினாடிக்கு 60 கனஅடிக்கு மிகாமல், நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொறுத்து, தேவைக்கேற்ப தண்ணீரைத் திறந்துவிடுமாறு நான் ஆணையிட்டுள்ளேன்.

 

இதனால் திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை மற்றும் இராதாபுரம் வட்டங்களில் 1744.55 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசன நிலங்கள் பாசன வசதிப் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம்' - அரசியல் கட்சிகள் ஒப்புதல்?

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

sterlite plant oxygen production all parties meeting

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாமே என்று கூறிய உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு, இதுகுறித்து விளக்கம் கேட்டு தெரிவிக்க தமிழக அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தது.

 

இதையடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைத்து விடுத்தது. அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

sterlite plant oxygen production all parties meeting

 

இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கனிமொழி எம்.பி., பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் கே.வி.தங்கபாலு, ஜெயக்குமார், தேமுதிக சார்பில் அன்புராஜ், பாலாஜி, பாமக சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விசிக, மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை

sterlite plant oxygen production all parties meeting

 

கூட்டத்தில் பேசிய திமுக கட்சியின் பிரதிநிதிகள், "ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆக்சிஜனைத்தான் தயாரிக்கிறதா என்பதைக் கண்காணிக்க அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்கலாம்" எனத் தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல் பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தரப்பில், "மனிதாபிமான அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம். மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படக் கூடாது" எனத் தெரிவித்துள்ளனர்.

sterlite plant oxygen production all parties meeting

 

மற்ற அரசியல் கட்சிகள், "ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டால் தென் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தித் தவிர, ஸ்டெர்லைட்டில் வேறு எந்த உற்பத்தியும் நடைபெறக்கூடாது" என கருத்து தெரிவித்துள்ளனர். 

 

பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கருத்துக்கள்படி, தமிழக அரசு இறுதி முடிவுகளை எடுத்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளது. 

 

இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

விசிக, அமமுக, மதிமுக கட்சிகளுக்கு அழைப்பில்லை!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

STERLITE PLANT TN GOVT DISCUSSION WITH ALL PARTIES MEETING

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காகத் திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (26/04/2021) காலை 09.15 மணிக்கு அனைத்து கட்சிக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

STERLITE PLANT TN GOVT DISCUSSION WITH ALL PARTIES MEETING

 

இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கனிமொழி எம்.பி., பாஜக சார்பில் மாநில தலைவர் எல்.முருகன், கட்சியின் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன், சவுந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன், வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் கே.வி.தங்கபாலு, ஜெயக்குமார், தேமுதிக. சார்பில் அன்புராஜ், பாலாஜி, பாமக சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விசிக, மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

STERLITE PLANT TN GOVT DISCUSSION WITH ALL PARTIES MEETING

 

அனைத்து கட்சிக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

 

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (26/04/2021) காலை 11.00 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்றே பிறப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.