Published on 13/04/2021 | Edited on 13/04/2021

14 வயது சிறுமியை 12 பேர் வன்கொடுமை செய்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமியை 12 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்ரியா கொடுத்த புகாரின் பேரில், 12 பேரிடம் திருச்செங்கோடு மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக விசைத்தறி தொழிலாளர்கள் உட்பட 11 பேரை அழைத்துச் சென்று தற்போது போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.